பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும்; மோடி பொங்கல் விழாவில் அண்ணாமலை பேச்சு
6 தை 2026 செவ்வாய் 05:45 | பார்வைகள் : 115
பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும். புதியது எப்போதும் வர வேண்டும் என திருச்சியில் நடந்த மோடி பொங்கல் விழாவில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில் தெரிவித்தார்.
திருச்சியில் பாஜ சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற பாஜவே காரணம். உலக வரலாற்றில் எந்தவொரு நாகரிகத்திலும் இல்லாத சிறப்பு தன்மை நமது பொங்கலுக்கு இருக்கிறது. மனித நாகரிகம், கலாசாரத்தை பார்க்கும் போது, பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும். புதியது எப்போதும் வர வேண்டும். நான்கு நாள் பொங்கல் விழா. தமிழர் கலாச்சாரத்தில் மட்டும் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜ கட்சி சில ஆண்டுகளாக நம்ம ஊரு பொங்கல் என்ற பெயரில் மக்கள் உடன் இணைந்து கொண்டாடி வருகிறது.
மாதம் ரூ.ஆயிரம்
இது அரசியல் மேடை இல்லை. இருந்தும் நான் சொல்கிறேன். ஒரு காளை வளர்ப்பவர்களுக்கு தான், அந்த காளையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் 2021ல் சொல்லி இருந்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி இருந்தார்கள்.
நியாயப்படி, திமுக இன்னைக்கு மாதம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால், மாதம் ரூ. ஆயிரம் கணக்கு போட்டால், எனக்கே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். யார் எல்லாம் காளை வளர்க்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
வாக்குறுதிகள்
அப்படி சொல்லிவிட்டு 4 ஆண்டு காலம் முடிந்து விட்டது. அவர்களின் ஆட்சியே முடிய போகிறது. காளை வளர்க்கும் எல்லோருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று ஆட்சிக்கு வந்தது திமுக. முதல்வர் ஸ்டாலின் காளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். எப்போதும் மகளிருக்கு பாதுகாப்பாக இந்த அரசு இருக்க வேண்டும். இப்பொழுது அரசு பாதுகாப்பாக இல்லாமல் இருக்கிறது. எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோளாக சொல்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan