பிளாக் காபி குடிப்பது ஏன் கல்லீரலுக்கு நன்மை பயக்கிறது தெரியுமா ?
5 தை 2026 திங்கள் 14:47 | பார்வைகள் : 1014
காபியில் உள்ள பாலிஃபீனால்கள் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. இவை கல்லீரல் செல்களைப் பாதுகாப்பதுடன், திசு சேதத்தை குறைக்கவும், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன. பலரும் தங்களது நாளை ஒரு கப் காபி அல்லது டீயுடன் தான் ஆரம்பிக்கிறார்கள். பலருக்கும் இது புத்துணர்ச்சி தரும் பானமாக மட்டுமல்லாது மனத் தெளிவு மற்றும் ஆற்றலையும் வழங்குகிறது. சமீபத்திய ஆய்வுகளும், தினசரி காபி குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன.
கொழுப்பு கல்லீரல் நோய், மது சார்ந்த கல்லீரல் பாதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறை காரணியான வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், “பிளாக் காபி உண்மையில் கல்லீரலுக்கு நல்லதா?” என்பது பற்றியும், அதற்கான அறிவியல் விளக்கத்தையும் பரேலில் உள்ள கிளெனீகிள்ஸ் மருத்துவமனையின் கல்லீரல் மருத்துவப் பிரிவு இயக்குநரான டாக்டர் அமீத் மண்டோட்டி பகிர்ந்துள்ளார்.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் பிளாக் காபி அருந்துபவர்களுக்கு கல்லீரல் நோய்கள் உருவாகும் அபாயம் குறைவாக இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.“குறிப்பாக, கல்லீரல் பாதிப்பு அபாயம் உள்ளவர்களுக்கு, கல்லீரல் நொதி அளவுகளைச் சீராக வைத்திருக்க காபி உதவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன” என்று டாக்டர் அமீத் மண்டோட் கூறுகிறார்.ALT, AST, GGTP போன்ற கல்லீரல் நொதிகள் தான் கல்லீரலின் செயல்திறனை அளவிடும் முக்கியக் குறியீடுகளாகும். இவை சீரான அளவில் இருப்பது குறைந்த அழற்சி, மேம்பட்ட நச்சு நீக்கம் மற்றும் நல்ல கல்லீரல் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.
நாள்பட்ட கல்லீரல் நோய்களிலும் தாக்கம் பிளாக் காபியின் நன்மைகள், முன்னெச்சரிக்கை நிலைகளைத் தாண்டி, வைரல் ஹெபடைடிஸ், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) மற்றும் மது சார்ந்த கல்லீரல் பாதிப்புகள் உள்ளவர்களுக்கும் பயன் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. “ஒரு நாளைக்கு இரண்டு கப்பைகளுக்கு மேல் காபி அருந்துபவர்களில் ஃபைப்ரோஸிஸ், சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோய் அபாயம் குறைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன” என்று டாக்டர் மண்டோட் கூறுகிறார். சில ஆய்வுகள், வழக்கமான காபி நுகர்வு நாள்பட்ட கல்லீரல் நோயாளிகளிடையே இறப்பு விகிதத்தையும் குறைக்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
ஏன் பிளாக் காபி நன்மை பயக்கிறது? காபியில் உள்ள பாலிஃபீனால்கள் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. இவை கல்லீரல் செல்களைப் பாதுகாப்பதுடன், திசு சேதத்தை குறைக்கவும், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன. இதனாலேயே காபி அருந்துபவர்களின் கல்லீரல் குறியீடுகள் பெரும்பாலும் சீராக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
மிதமான அளவு தான் முக்கியம்என்ன தான் நன்மைகள் இருந்தாலும் அளவுக்கு மீறுவது பாதிப்பை ஏற்படுத்தலாம். “ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப்பைகள் பிளாக் காபி என்பது பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமாகும்” என்று டாக்டர் அமித் மண்டோட் கூறுகிறார். அதிகப்படியான காஃபின் அமிலப் பிரச்சனை, தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.
எனவே, அமிலப் பிரச்சனை, வயிற்றுப் புண், பதட்டம் அல்லது தூக்க பிரச்சனை உள்ளவர்கள் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.எனவ, பிளாக் காபி என்பது கல்லீரலுக்கான மருந்து ஒன்றும் இல்லை. ஆனால், அதை கவனமுடனும், மிதமான அளவிலும் உட்கொண்டால், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளாக இது இருக்கலாம். ஏற்கனவே கல்லீரல் நோய் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே இதனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan