டொரோண்டோவில் பேருந்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
5 தை 2026 திங்கள் 14:39 | பார்வைகள் : 202
கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள யோர்க்டேல் GO பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு ஆண் உயிரிழந்ததாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யோர்க்டேல் சாலை மற்றும் அலன் எக்ஸ்பிரஸ்வேயை நோக்கிச் செல்லும் ரேம்ப் அருகிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்திற்குள் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வந்த தகவலையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு ஆணை பொலிஸார் மீட்டுள்ளனர். மருத்துவ அவசர சேவையினர் (Paramedics) சம்பவ இடத்தில் ஒருவரை பரிசோதித்ததாகவும், ஆனால் மருத்துவமனைக்கு எவரையும் கொண்டு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் சுமார் 20 வயதுகளின் இறுதியில் இருக்கும் ஆண் என்றும், பழுப்பு நிற தோல் கொண்டவர் என்றும், சுமார் 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை எந்தக் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan