Paristamil Navigation Paristamil advert login

விஜய் ஹசாரே தொடரில் வேகமாக 100 சிக்சர்கள்: ருதுராஜ் சாதனை

விஜய் ஹசாரே தொடரில் வேகமாக 100 சிக்சர்கள்: ருதுராஜ் சாதனை

5 தை 2026 திங்கள் 14:39 | பார்வைகள் : 125


விஜய் ஹசாரே தொடரில் அதிவேகமாக 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் மகாராஷ்டிரா, மும்பை அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி 50 ஓவர்களுக்கு 366 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.

இதில் குல்கர்னி 114 ஓட்டங்களும், பிரித்வி ஷா 71 ஓட்டங்களும், ருதுராஜ் 66 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் விஜய் ஹசாரே தொடரில் அதிவேகமாக 100 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ருதுராஜுன் இந்த சாதனையை பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

367 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 238 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் மகாராஷ்டிரா அணி 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்