ILT20 தொடர் - முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கரனின் DV அணி
5 தை 2026 திங்கள் 13:39 | பார்வைகள் : 130
ILT20 தொடரில் டெசர்ட் வைபர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ILT20 தொடர் கடந்த டிசம்பர் 2 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 4 ஆம் திகதி வரை நடைபெற்றது.
04-01-2026 நடைபெற்ற இறுதிப்போட்டியில், டெசர்ட் வைபர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற எம்ஐ எமிரேட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய டெசர்ட் வைபர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக, அணித்தலைவர் சாம் கரன் 74 ஓட்டங்கள் குவித்தார்.
டெசர்ட் வைபர்ஸ் வெற்றி 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ், 18.3 ஓவர்களில் 136 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம், டெசர்ட் வைபர்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ILT20 கிண்ணத்தை வெற்றி பெற்றது.
சாம் கரண், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். இந்த தொடரில் மொத்தமாக 397 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் ILT20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெசர்ட் வைபர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற டெசர்ட் வைபர்ஸ் அணி 7 லட்சம் டொலர் பரிசுத்தொகையை வென்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan