தையிட்டிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அரசாங்கம் உறுதி
5 தை 2026 திங்கள் 10:46 | பார்வைகள் : 547
தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அங்குள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், காணியின் உரிமையாளர்கள், அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் செயற்படாது பொறுமை காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தையிட்டியை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்குக் கிடையாது. தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்.
இது தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கும் இடையிலான பிரச்சினை. இதில் வேறு தரப்பினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு மேற்படி இரு தரப்புகளும் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். இது இலகுவான காரியம். எமது அரசு இந்த விடயத்தில் ஆழ்ந்த கரிசனை செலுத்தியுள்ளது. இரு தரப்புகளும் இணக்கத்துக்கு வருவதற்கான வழிவகைகளை அரசின் விசாரணைக் குழு செய்யும்.
எனவே, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அங்குள்ள மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கின்றோம்.
இந்த விவகாரத்தில் வேறு தரப்பினர் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை, தையிட்டி காணி உரிமையாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் காணி உரிமையாளர்கள் செயற்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan