Paristamil Navigation Paristamil advert login

வெனிசுலா விவகாரம் - அநுரவின் துனிச்சலான நகர்வு

வெனிசுலா விவகாரம் -  அநுரவின் துனிச்சலான நகர்வு

5 தை 2026 திங்கள் 09:46 | பார்வைகள் : 276


வெனிசுலா விவகாரத்தில் ஜனாதிபதி துணிச்சலான நிலைப்பாட்டை அறிவிப்பார் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வெனிசுலா மீதான வொஷிங்டனின் நடவடிக்கைகளுக்குச் சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்ப்புத் தெரிவிப்பார்.

ஒரு இறையாண்மையுள்ள நாட்டிற்கு எதிராக அமெரி்க்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக, அநுர குமார திசாநாயக்க ஒரு துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவருக்கு தமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்