Paristamil Navigation Paristamil advert login

எரிந்த வாசனை காரணமாக Beyrouth-Paris ஏர் பிரான்ஸ் விமானம் Munichஇல் அவசர தரையிறக்கம்!!

எரிந்த வாசனை காரணமாக Beyrouth-Paris ஏர் பிரான்ஸ் விமானம் Munichஇல் அவசர தரையிறக்கம்!!

5 தை 2026 திங்கள் 08:00 | பார்வைகள் : 926


பெய்ரூத் நகரத்திலிருந்து பரிஸுக்கு பறந்த ஏர் பிரான்ஸ் விமானம், விமானத்தின் உள் பகுதியில் எரிந்த வாசனை உணரப்பட்டதால், ஞாயிற்றுக்கிழமை மாலை ஜெர்மனியின் முனிச் நகருக்கு திசைமாற்றப்பட்டுள்ளது. 

FlightRadar24 தகவலின்படி, பரிஸில் தரையிறங்க வேண்டியிருந்த இந்த விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காக முனிச்சிக்கு திசை மாற்றப்பட்டது. ஏர் பிரான்ஸ் நிறுவனமும் இந்த தகவலை உறுதிப்படுத்தி, விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 8:18 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது.

விமானப் பணியாளர்களின் சட்டபூர்வ பணிநேர வரம்பு முடிவடைந்ததால், பயணத்தின் மீதமுள்ள பகுதி ரத்து செய்யப்பட்டது. முனிச்சில் பயணிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு, தங்குமிடம் மற்றும் மாற்றுப் பயண ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என்று ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்