Paristamil Navigation Paristamil advert login

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியே தீருவோம்: அமித்ஷா

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டியே தீருவோம்: அமித்ஷா

5 தை 2026 திங்கள் 11:55 | பார்வைகள் : 517


எப்பாடுபட்டாவது திமுக ஆட்சியை ஒழிப்போம். முடிவு கட்டுவோம்,'' என புதுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

தமிழக பாஜ தலைவர்நயினார் நாகேந்திரன் பயணத்தின் நிறைவு விழா மாநாடு புதுக்கோட்டையில் நடந்தது.

தேஜ கூட்டணி ஆட்சி

இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:தேஜ கூட்டணி அரசு அமைக்கப்பட வேண்டாமா? பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டாமா?மாபெரும் மகத்தான தமிழ் மொழில் உரையாற்ற முடியவில்லை என மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் புனிதமான மண்ணுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே மாபெரும் சோழ சாம்ராஜ்யம் ஆண்ட பூமியில் உரையை துவக்குகிறேன்.

கனவு நிறைவேறாது

ஒட்டு மொத்த பாரதத்திலும் மிகப்பெரிய ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி என்றால் திமுக தான். தேர்தல் அறிக்கையில் மிகக்குறைவான வாக்குறுதியை நிறைவேற்றிய கட்சி என்றால் அது திமுக ஆட்சி தான்.

அதிமுக, பாஜ கூட்டணி வெற்றி கூட்டணி. 1998 நாம் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். 2019ம் ஆண்டு தேர்தலிலும் நாம் ஒன்றாக களம் கண்டோம்.2021ம் ஆண்டு தேர்தலிலும் கூட இணைந்து தேர்தலை சந்தித்தோம். நாம் 2024 ல் தனியாக தேர்தலை சந்தித்தாலும் என்றாலும் அதிமுக பாஜ மொத்த ஓட்டுகளை எண்ணி பார்த்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம்.

பொய் பிரசாரம்


தேஜ அரசு, தமிழுக்கு எதிரானது என ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் எழுதலாம் என முதல்முறையாக தேஜ கூட்டணி அரசு தான் அறிமுகம் செய்தது. மோடி ஆட்சியில் தான் ரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது. திருக்குறளை 13 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.பிஜி தீவில் தமிழ் கற்றுக் கொள்ள தேவையான வசதிகளை பாஜ அரசு ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்