Paristamil Navigation Paristamil advert login

யாழ். மாவட்ட அரச அதிபருடன் நயினாதீவு விகாராதிபதி சந்திப்பு!

யாழ். மாவட்ட அரச அதிபருடன் நயினாதீவு விகாராதிபதி சந்திப்பு!

4 தை 2026 ஞாயிறு 16:38 | பார்வைகள் : 284


நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ, யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார்.

மேலும் விகாராதிபதி தமது பக்க நிலைப்பாடுகளையும் மாவட்ட செயலரிடம் தெரிவித்தார்.

இலங்கையின் தையிட்டி விகாரை தற்போது அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழ விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தனியாருக்கு சொந்தமானவை எனவும் , அவற்றில் தற்போது விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் காணியை தவிர ஏனைய காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும்.

என்றும், தற்போதுள்ள தையிட்டி விகாரையை தன்னிடம் பொறுப்பளித்தால், விகாரை அமைந்து 1.2 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களுக்கு தனது பொறுப்பின் கீழ் உள்ள திஸ்ஸ விகாரை காணியில் 1.2 ஏக்கர் காணியை மாற்றீடாக வழங்க தயார் என நயினாதீவு விகாராதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்