Paristamil Navigation Paristamil advert login

பராசக்தி முதல் விமர்சனம்

பராசக்தி முதல் விமர்சனம்

4 தை 2026 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 395


சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் பராசக்தி. முழுக்க முழுக்க ஹிந்தி எதிர்ப்பு கதையை மையப்படுத்திய இந்தப் படம் 1964ல் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப காஸ்டியூம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 25ஆவது படம். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜிவி பிரகாஷிற்கு 100ஆவது படம்.

முதலில் இந்தப் படம் சூர்யாவிற்காக உருவாக்கப்பட்டது. பின்னர் கைவிடப்பட்டு சிவகார்த்திகேயனுக்காக கதை உருவாக்கப்பட்டு இப்போது 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முதலில் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் வசூலை கருத்தில் கொண்டு படத்தை 10ஆம் தேதி வெளியிட முடிவு செய்தனர். அதன்படி வரும் 10ஆம் தேதி சனிக்கிழமை பராசக்தி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு சென்சார் சர்ஃட்டிபிகேட் பிரச்சனை இருந்து வரும் நிலையில், படத்தின் வெளிநாட்டு சான்றிதழ் முடிந்து படம் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் படத்தை ப்ரீ ஷோவில் பார்த்த பலரும் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து வரும் நிலையில், பராசக்தி படம் ஹிட் கொடுக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை விநியோகம் செய்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் 41 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி என்று சொல்லப்படுகிறது. ஜன நாயகனுக்கு போட்டியாக வரும் பராசக்தி பொங்கல் ரேஸில் ஜெயிக்குமா? பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்