Paristamil Navigation Paristamil advert login

iPhone 18 இல்லை... வேறொரு திட்டத்தில் Apple

iPhone 18 இல்லை... வேறொரு திட்டத்தில் Apple

4 தை 2026 ஞாயிறு 08:34 | பார்வைகள் : 216


ஆப்பிள் நிறுவனம் 2026-ஆம் ஆண்டுக்கான iPhone வெளியீட்டு திட்டத்தை மாற்றியுள்ளது.

2025-இல் iPhone 17 வெளியிடப்பட்ட நிலையில், 2026 முதல் பாதியில் iPhone 17e என்ற குறைந்த விலை “entry-level” மொடல் அறிமுகமாக உள்ளது. இதனால், iPhone 18 சீரிஸ் 2027-ல் வெளியிட வாய்ப்புள்ளது.

ஆய்வாளர் மிங்-சி குவோவின் தகவலின்படி, 2026 இரண்டாம் பாதியில் iPhone 18 Pro, iPhone 18 Pro Max, iPhone 18 Slim மற்றும் ஆப்பிளின் முதல் foldable iPhone வெளியாகும்.

iPhone 16e மற்றும் iPhone Air போன்ற மொடல்கள் 2025-ல் அறிமுகமானதால், 2026 இறுதியில் ஆப்பிள் சந்தையில் எட்டு விதமான iPhone மொடல்களை வைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

இதனால், வருடம் முழுவதும் விற்பனை சாளரத்தை விரிவாக்கும் வகையில் “staggered release” திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

Foldable iPhone குறித்து வதந்திகள் அதிகமாக வெளிவருகின்றது. முழுமையாக திறக்கும்போது அது iPad போன்ற தோற்றத்தை தரும் என கூறப்படுகிறது.

டைட்டானியம் அலாய் உட்புற அமைப்பு, stainless steel மற்றும் liquid metal கொண்ட hinge, dual-lens பின்புற கேமரா, single front camera ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நிபுணர்கள், அதிக அழுத்தம் தாங்கும் பகுதிகளில் டைட்டானியம், வெப்பம் வெளியேற்றம் மற்றும் எடை குறைக்க அலுமினியம் பயன்படுத்தப்படும் எனக் கூறுகின்றனர்.

இந்த மாற்றங்கள், ஆப்பிள் தனது iPhone வரிசையை விரிவுபடுத்தும் முயற்சியாகவும், சந்தை போட்டியை சமாளிக்கும் புதிய உத்தியாகவும் பார்க்கப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்