Paristamil Navigation Paristamil advert login

உயர்நிலைப் பாடசாலைகளில் ஸ்மார்ட்போன் தடை: நடைமுறையில் சாத்தியமா?

உயர்நிலைப் பாடசாலைகளில் ஸ்மார்ட்போன் தடை: நடைமுறையில் சாத்தியமா?

3 தை 2026 சனி 08:07 | பார்வைகள் : 1051


அரசு 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்யவும், 2026 கல்வியாண்டு தொடக்கம் முதல் உயர்நிலைப் பாடசாலைகளில் (au lycéeஸ்) ஸ்மார்ட்போன் பயன்பாட்டைத் தடை செய்யவும் திட்டமிட்டுள்ளது. 

இந்த முடிவு தேசிய கல்வித் துறை சங்கங்களில் பெரும் சந்தேகத்தையும் எதிர்வினையையும் ஏற்படுத்தியுள்ளது. SNPDEN-Unsa சங்கத்தின் தேசிய செயலாளர் மற்றும் எசோன் மாவட்ட பாடசாலை முதல்வரான ஒலிவியர் போஃப்ரேர், ஒவ்வொரு மாணவரையும் கண்காணிக்க ஒருவர் தேவைப்படுமெனில் அது முற்றிலும் சாத்தியமற்றது என்றும், இதற்காக கூடுதல் மனிதவள வசதிகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துப்படி, முழுமையான தடை விதிப்பதைவிட மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்வி வழங்குவது முக்கியம். திரைகளின் தீமைகளை விளக்கி, வழித்தடங்கள், வகுப்பறைகளின் முன்புறம், ஆவண மையங்கள் போன்ற குறிப்பிட்ட இடங்களில் கைபேசி பயன்பாட்டைத் தடை செய்வதே நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும். 

உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் வகுப்புகளுக்கிடையில் வெளியே செல்லக்கூடியவர்களாக இருப்பதால், முழுமையான கைபேசி தடை நடைமுறையில் அமல்படுத்த முடியாததும், அது ஒரு அபத்தமான தீர்மானமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்