Paristamil Navigation Paristamil advert login

செயின்ட்-டெனிஸில் நகைக்கடை கொள்ளை: 3 இலட்சம் யூரோக்கள் நஷ்டம்!!

செயின்ட்-டெனிஸில் நகைக்கடை கொள்ளை: 3 இலட்சம் யூரோக்கள் நஷ்டம்!!

2 தை 2026 வெள்ளி 23:02 | பார்வைகள் : 571


செயின்ட்-டெனிஸ் நகர மையத்தில், காப்ரியல்-பெரி தெருவில் உள்ள ஒரு நகைக்கடை புதன்கிழமை அதிகாலையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கூரை வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பல நகைகளை திருடியுள்ளனர். 

ஏற்பட்ட சேதம் சுமார் 3 இலட்சம் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இறுதி கணக்கீடு இன்னும் நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணியளவில் அலாரம் செயல்பட்டிருந்த போதிலும், காலை கடை திறந்த பின்னரே காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதே தகவல் மூலத்தின் படி, ஒரு தொலைக்கண்காணிப்பு (télésurveillance) ஊழியர் சம்பவ இடத்திற்கு வந்து “சந்தேகத்தை உறுதி செய்ய” ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், எந்த அசாதாரணத்தையும் காணாததால், அவர் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. 

இதுவரை, இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எவரும் அடையாளம் காணப்படவில்லை, யாரும் கைது செய்யப்படவும் இல்லை. நகைக்கடை மற்றும் அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படுவதுடன், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்