Paristamil Navigation Paristamil advert login

சுவிட்ஸர்லாந்து புத்தாண்டு விழாவில் ஏற்பட்ட தீ விபத்து

சுவிட்ஸர்லாந்து புத்தாண்டு விழாவில் ஏற்பட்ட தீ விபத்து

2 தை 2026 வெள்ளி 16:18 | பார்வைகள் : 490


சுவிட்ஸர்லாந்தில், புத்தாண்டு விழாவின் போது 400 பேர் கூடியிருந்ததாக கூறப்படும் உல்லாச விடுதி ஒன்றில் ஏற்பட்ட சம்பவமானது ஒரு மிகப் பெரிய தீ விபத்து என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த சம்பவம், ஒரு பாரிய வெடிப்பு எனவும் தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சுவிட்ஸர்லாந்து நாட்டின் அதிகாரப் பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்தானது, Conflagration என விபரிக்கப்படும் ஒரு பாரிய தீயினால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Conflagration என்பது, அதிக சேதத்தை விளைவிக்கும் பெரும் தீவிபத்து என வெலெய்ஸ் கென்டன் சபாநாயகர் பீட்ரைஸ் பில்லவுட் குறிப்பிட்டுள்ளார்.

தீப்பொறிகள் பொருத்தப்பட்ட ஷாம்பெயின் போத்தல்களால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் சரியான காரணத்தை வெளியிட நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள அதேவேளை, சம்பவம் குறித்து மேலும் பல தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

விபத்து ஏற்பட்ட போது, அங்கிருந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் குறித்த உல்லாச விடுதியின் மனித கொள்ளளவு தொடர்பில் இதுவரை அறிய முடியவில்லை எனவும், தற்போதைய நிலவரப்படி 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 115 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்