Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் அமைச்சர்களின் சலுகைகள் நீக்கம்: 25 ஆண்டுகளாக வாகனம் ஓட்டாத டானியல் வைலானின் கவலை!!

முன்னாள் அமைச்சர்களின் சலுகைகள் நீக்கம்: 25 ஆண்டுகளாக வாகனம் ஓட்டாத டானியல் வைலானின் கவலை!!

2 தை 2026 வெள்ளி 15:51 | பார்வைகள் : 1088


ஜனவரி 1 முதல், பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னுவின் முடிவின்படி, பெரும்பாலான முன்னாள் பிரதமர்கள் மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர்களின் ஓட்டுநருடன் கூடிய வாகனம், காவல் பாதுகாப்பு மற்றும் செயலாளர் போன்ற சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. 

அரசியல் தலைவர்கள் மக்களிடம் தியாகம் கேட்கும் போது, அவர்களும் முன் மாதிரியாக நடக்க வேண்டும் என்பதே இந்த முடிவின் நோக்கம். இதனால் 24 காவல் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தலை எதிர்க்கும் பணிகளுக்கு மாற்றப்படுவார்கள். இந்த மாற்றம் அரசின் செலவைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.இந்த முடிவு சில முன்னாள் அமைச்சர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. 

25 ஆண்டுகளாக ஓட்டுநரை பயன்படுத்தி வந்த முன்னாள் உள்துறை அமைச்சர் டானியல் வைலான் (Daniel Vaillant), உடல்நலக் காரணங்களால் தற்போது வண்டி ஓட்ட முடியாததால் தனது கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். இருப்பினும், இன்னும் மிரட்டல்களை எதிர்கொள்ளும் சிலர், சமீபத்தில் பதவி விலகியவர்கள் அல்லது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ஆகியோர் பாதுகாப்பு தொடரும் சிறிய குழுவில் அடங்குவர். இந்த சலுகைகள் நீக்கப்படுவதால் ஆண்டுக்கு சுமார் 5 மில்லியன் யூரோக்களை அரசு சேமிக்க முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்