55 பந்துகளில் சதமடித்த மார்ஷ்! ஆட்டமிழக்காமல் 94 ரன் எடுத்த ஹார்டி..நொறுங்கிய எதிரணி
2 தை 2026 வெள்ளி 13:07 | பார்வைகள் : 560
பிக் பாஷ் லீக் தொடரில் மிட்சேல் மார்ஷ் 102 ஓட்டங்கள் எடுக்க, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 229 ஓட்டங்கள் குவித்தது.
BBL 2025-26 தொடரின் 19வது போட்டியில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
பெர்த் அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. ஃபின் ஆலன் 16 ஓட்டங்களிலும், கொனோலி 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும், மிட்சேல் மார்ஷ் மற்றும் ஆரோன் ஹார்டி இருவரும் சரவெடி ஆட்டம் ஆடினர். இதன்மூலம் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட மிட்சேல் மார்ஷ் 55 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 58 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அரைசதம் கடந்த ஆரோன் ஹார்டி (Aaron Hardie) ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (Perth Scorchers) அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் குவித்தது. ஹோபர்ட் அணித்தலைவர் நாதன் எல்லிஸ் 44 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan