Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாலஸ்தீனக் கைதி உயிரிழப்பு

இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாலஸ்தீனக் கைதி உயிரிழப்பு

2 தை 2026 வெள்ளி 10:51 | பார்வைகள் : 459


இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாலஸ்தீனக் கைதி உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா (Wafa) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் நெகேவ் (Negev) பகுதியில் உள்ள ரஹாட் (Rahat) நகரைச் சேர்ந்த ஹசன் ஈசா அல்-கஷாலே (Hassan Issa al-Qashaleh) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 13 மாதங்களுக்கும் மேலாக பீர்ஷெபா (Beersheba) சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இன்னும் ஆறு மாதங்களில் விடுதலையாகவிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

காசா மீதான போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீனக் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

சிறைகளில் நிலவும் அதிகப்படியான நெருக்கடி, முறையான மருத்துவ வசதியின்மை மற்றும் சித்திரவதைகள் காரணமாகவே இத்தகைய மரணங்கள் நிகழ்வதாக பாலஸ்தீனக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனக் கைதிகள் இஸ்ரேலிய காவலில் அல்லது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 86 பேரின் அடையாளங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த 94 கைதிகளின் உடல்களை இஸ்ரேல் இன்னும் ஒப்படைக்காமல் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்