Paristamil Navigation Paristamil advert login

புத்தாண்டு கொண்டாட்டங்களில் 1,173 வாகனங்கள் தீக்கிரை: 505 பேர் கைது!!

புத்தாண்டு கொண்டாட்டங்களில் 1,173 வாகனங்கள் தீக்கிரை: 505 பேர் கைது!!

2 தை 2026 வெள்ளி 07:54 | பார்வைகள் : 1324


புத்தாண்டு கொண்டாங்களில், உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி 1,173 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 984-ஐ விட அதிகமாகும். மேலும் 505 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 403 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த சம்பவங்கள் நடந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் நிலைமை அதிகமாக அமைதியாக இருந்ததாகவும், வன்முறை சம்பவங்கள் குறைவாக பதிவானதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களும் கடந்த ஆண்டை விட குறைந்ததாக குறிப்பிட்டுள்ளது. சில பகுதிகளில், குறிப்பாக ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் முல்ஹூஸ் நகரங்களின் சில குடியிருப்பு பகுதிகளில், சூழ்நிலை சற்று கடினமாக இருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்