Paristamil Navigation Paristamil advert login

சுவிஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பாரிய தீ விபத்து- பலர் பலி

சுவிஸில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பாரிய தீ விபத்து- பலர் பலி

1 தை 2026 வியாழன் 16:49 | பார்வைகள் : 521


சுவிற்ஸர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ் - மொன்டானா (Crans-Montana) என்ற ரிசோர்ட் நகரில் உள்ள பார் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றவேளையில் இடம்பெற்ற வெடிப்பு மற்றும் தீ விபத்தில் பலர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு நேரப்படி இன்று (ஜன. 1) அதிகாலை 1.30 மணியளவில் பாரில் விருந்தினர்கள் அனைவரும் புத்தாண்டு நிகழ்வுகளில் மூழ்கியிருந்தபோதே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என சுவிஸ் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, இசை நிகழ்ச்சியின்போது வெடித்த பட்டாசுகளே இந்த விபத்தினை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக அங்கு சென்று தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் என்றும் கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் மீட்புப் படையினர் ஹெலிகொப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக அப்பகுதியில் அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் பொலிஸார் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்