Paristamil Navigation Paristamil advert login

நாட்டின் வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு திட்டங்கள்: பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு திட்டங்கள்: பிரதமர் மோடி

1 தை 2026 வியாழன் 12:20 | பார்வைகள் : 157


நாட்டின் வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாக்கப்படுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் முதல் சோலாப்பூர் வரையில் ஆறுவழி பசுமைச்சாலை அமைக்கவும், ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை 326 ஐ விரிவுபடுத்தவும் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளர்ச்சிக்காக அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. நாசிக் - சோலாப்பூர் - அகால்கோட் இடையே ஆறுவழி பசுமைச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது. பிரதமரின் கதி சக்தியின் ஒருபகுதியாக இந்த திட்டத்தால் பயண நேரம் வெகுவாக குறைவதுடன், மேற்கு முதல் கிழக்கு பகுதி வரையிலான இணைப்பு வலுப்பெறுவதுடன், ஏராளமானவேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்