Paristamil Navigation Paristamil advert login

"கடைசி வினாடி வரை நான் பணியில் இருப்பேன்": ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துரை!!

31 மார்கழி 2025 புதன் 21:14 | பார்வைகள் : 1843


பிரெஞ்சு மக்களுக்கான தனது ஒன்பதாவதும், கடைசிப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், « நீங்கள் எனக்கு வழங்கிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கடைசி நொடிவரை நான் பணியாற்றுவேன் » என்று தெரிவித்துள்ளார். 

அவரது இரண்டாவது ஐந்து ஆண்டு ஆட்சியின் கடைசி முழு ஆண்டை தொடங்கும் நிலையில், மீதமுள்ள திட்டங்களை முன்னெடுக்கத் தொடர்ந்து செயல்படுவேன் என அவர் உறுதியளித்துள்ளார். பத்து நிமிடங்களுக்கும் குறைவாக நீடித்த இந்த பாரம்பரிய உரையில், எந்த முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.

மேலும், 2026 ஆம் ஆண்டு பயனுள்ள ஆண்டாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக, 2027 ஜனாதிபதி தேர்தலைக் குறித்து பேசும் போது, கடந்த பத்து ஆண்டுகளில் தாம் பங்கேற்காத முதல் தேர்தல் இதுவாக இருக்கும் என்றும், அந்தத் தேர்தல் அமைதியான முறையில், குறிப்பாக வெளிநாட்டு தலையீடுகளின்றி நடைபெறுவதை உறுதி செய்யத் தான் முழுமையாக செயல்படுவேன் என்றும் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்