Paristamil Navigation Paristamil advert login

இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய வளர்ச்சி

இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள பாரிய வளர்ச்சி

31 மார்கழி 2025 புதன் 19:30 | பார்வைகள் : 147


2024 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2025 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியில் விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியில் சர்வதேச விமானப் பயணிகளின் கையாளுதல் (International passenger movement) 9.23 மில்லியனாகப் பதிவாகியுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.20% வளர்ச்சியாகும்.

அதேபோல், 2025 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியில் 58,454 சர்வதேச விமானக் கையாளுதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.64% அதிகரிப்பாகும்.

மேலும், 2025 ஜனவரி - நவம்பர் காலப்பகுதியில் சுமார் 2.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் வருகை தந்துள்ளனர்.

இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16.73% வளர்ச்சியாகும்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதுடன் விமானப் போக்குவரத்துத் துறைக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும், அமைச்சர்களின் வழிகாட்டலின் கீழ் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பால் இந்த மைல்கற்களை எட்ட முடிந்தமை இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையின் மறுமலர்ச்சிக்கான அறிகுறி எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்