Paristamil Navigation Paristamil advert login

விஜய்சேதுபதியின் ஜெயிலர் 2’ படத்தின் புதிய தோற்றம் இதுவா?

விஜய்சேதுபதியின்  ஜெயிலர் 2’ படத்தின் புதிய தோற்றம் இதுவா?

31 மார்கழி 2025 புதன் 15:59 | பார்வைகள் : 224


பெரிய நடிகர்களை பொருத்தவரைக்கும் அவர்கள் நடிக்கும் புது படங்களில் அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப புதுப்புது கெட்டப்களில் வருவார்கள். அப்படி வித்தியாசமான கெட்டப் இருந்தால் அதை வெளியில் தெரியாதவாறு பார்த்துக் கொள்வார்கள். அவர்களை விட அந்தப் படத்தின் இயக்குனர்கள் தான் அதிக அக்கறையுடன் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு விக்ரம், அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் புதுப்புது கெட்டப்களில் தான் வருவார். ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகும் வரை அந்த கெட்டப் வெளியில் தெரியாதவாறு பார்த்துக் கொள்வார். அந்த வகையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் சமீபத்தில்தான் விஜய்சேதுபதி இணைந்தார். அந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா அல்லது எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என இதுவரைக்கும் தெரியவில்லை.

ஏற்கனவே ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. பேட்ட திரைப்படத்திற்குப் பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது பார்க்க காமெடியாகவும் இருந்தது.

அதே சமயம் வித்தியாசமாகவும் இருந்தது. ஆனால் அந்த கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலகலப்பு படத்தில் இளவரசு கெட்டப் மாதிரி இருந்ததாக விஜய் சேதுபதியை கிண்டல் அடித்த வந்தனர். ஒருவேளை அது ஜெயிலர் 2 படத்திற்காக அவர் போடும் கெட்டப்பாக இருக்கலாமோ என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் அட்லி தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்திற்கான கெட்டப் தான் அது என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. பாலாஜி தரணிதரன் இந்த கெட்டப்பை ரகசியமாக வைத்திருந்தாராம். ஆனால் வாரந்தோறும் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதால் வேறு வழியில்லாமல் அதை கெட்டப்பிலேயே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.

வர்த்தக‌ விளம்பரங்கள்