Paristamil Navigation Paristamil advert login

SNCF: 2026ல் TGV மற்றும் Ouigo டிக்கெட் விலை அதிகரிப்பு!!

SNCF: 2026ல் TGV மற்றும் Ouigo டிக்கெட் விலை அதிகரிப்பு!!

31 மார்கழி 2025 புதன் 14:47 | பார்வைகள் : 1162


2026ஆம் ஆண்டில் SNCF நிறுவனத்தின் TGV Inoui மற்றும் Ouigo ரயில் டிக்கெட் கட்டணங்கள் 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சராசரியாக 1% உயர்த்தப்படும் என்று SNCF Voyageurs அறிவித்துள்ளது. 

இந்த உயர்வு, Insee கணிப்பின்படி 2026 ஜூன் மாதத்தில் 1.5% ஆக இருக்கும் பணவீக்கத்தை விட குறைவானது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், 2026ஆம் ஆண்டில் TGV மூலம் பயணம் செய்வது கொஞ்சம் அதிக செலவாகும்.

Ouigo மற்றும் TGV Inoui டிக்கெட்டுகளுக்கிடையில் SNCF கட்டண உயர்வில் வேறுபாடு இல்லை என கூறினாலும், நுகர்வோர் சங்கமான Fnaut வெளியிட்ட ஆய்வு வேறுபட்ட நிலையை காட்டுகிறது. 2017 முதல் 2023 வரை Ouigo குறைந்த கட்டண டிக்கெட்டுகள் 73% வரை உயர்ந்துள்ளன, ஆனால் TGV Inoui டிக்கெட்டுகள் வெறும் 4% மட்டுமே உயர்ந்துள்ளன. Ouigo பயணிகளுக்கான ஒரு கிலோமீட்டர் கட்டணம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்