Paristamil Navigation Paristamil advert login

டார்க் சாக்லேட் பாதாம் ஆரஞ்சு கேக்

டார்க் சாக்லேட் பாதாம் ஆரஞ்சு கேக்

31 மார்கழி 2025 புதன் 14:59 | பார்வைகள் : 125


பண்டிகை காலம் என்றாலே அனைவரும் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், இதுபோன்ற காலங்களில் அதிக அளவு இனிப்புகளை எடுத்துக் கொள்வது உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அனைத்து இனிப்புகளுமே ஆபத்தானவை அல்ல, அதேபோல், இனிப்புகளை எப்படி மற்றும் எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து தான் ஒருவரின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த டார்க் சாக்லேட் பாதாம் ஆரஞ்சு கேக், சுவைமிக்கது மற்றும் மனம் நிறைவை அளிப்பது மட்டுமல்லாமல், பண்டிகையை சிறப்பானதாகவும் மாற்றும். தயார் செய்ய எளிதான இந்த கேக், நவீன ஃபேக்கிங்கின் சுவையையும், அதே நேரத்தில் ஆரோக்கிய தேர்வாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்
பாதாம் மாவு - 2 கப் (180 கிராம்)
advertisement
முட்டைகள் - 4 (நடுத்தர அளவு)
டார்க் சாக்லேட் - அரை கப் (100 கிராம்)
மேப்பிள் சிரப் - அரை கப் (113 மில்லி)
நெய் - கால் கப் (40 மில்லி)
புதிய ஆரஞ்சுத் தோல் துருவல் - 1 தேக்கரண்டி
ஆரஞ்சு சாறு - கால் கப் (47 மில்லி)
வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை


தயார் செய்யும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் பாதாம் மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டைகள், மேப்பிள் சிரப், வெண்ணிலா எசென்ஸ் மற்றும் ஆரஞ்சு சாற்றை சேர்த்து கலவையை தயார் செய்யவும். பின்னர், டார்க் சாக்லேட்டை உருக்கி, அதில் நெய் மற்றும் ஆரஞ்சுத் தோல் துருவலைச் சேர்க்கவும். 
 

இப்போது முதலில் தயார் செய்த இரண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து, மென்மையான மாவாக மாற்றவும். பின்னர், இந்தக் கலவையை 8 இன்ச் கேக் டின்னில் ஊற்றி, முன்கூட்டியே 180 டிகிரி செல்சியஸுக்கு சூடுபடுத்தப்பட்ட அவனில் சுமார் 45 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். பின்பு, அதனை வெளியே எடுத்து முழுமையாக ஆறிய பிறகு, துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்