Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் நேருக்கு நேர் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து

அமெரிக்காவில் நேருக்கு நேர் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து

31 மார்கழி 2025 புதன் 12:05 | பார்வைகள் : 226


அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மாகாணத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை நியூ ஜெர்சி மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உள்ளூர் நேரப்படி ஹாமண்டன் முனிசிபல் விமான நிலையத்திற்கு அருகில் இந்த ஹெலிகாப்டர் விபத்தானது நடந்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்து வந்த மீட்பு படையினர், தீப்பிடித்து எரிந்து வந்த ஹெலிகாப்டரை போராடி அணைத்தனர்.

விபத்தின் போது ஹெலிகாப்டர் வானில் இருந்து சுழன்ற படி கீழே விழுந்த காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளன.

விமான விபத்தின் போது இரண்டு ஹெலிகாப்டர்களிலும் தலா ஒரு விமானை மட்டுமே இருந்துள்ளனர்.

அத்துடன் விமான விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்