Paristamil Navigation Paristamil advert login

டிசம்பர் 31 புத்தாண்டு இரவு : நாடு முழுவதும் 90,000 காவல்துறையினர் பணியில்!!

டிசம்பர் 31 புத்தாண்டு இரவு : நாடு முழுவதும் 90,000 காவல்துறையினர் பணியில்!!

31 மார்கழி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 2383


டிசம்பர் 31 புத்தாண்டு இரவுக்காக, பிரான்ஸ் முழுவதும் 90,000 காவல்துறையினரும் ஜொந்தாமினர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதில் 10,000 பேர் பரிஸ் மற்றும் அதன் அருகிலுள்ள சிறிய புறநகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். 

உள்துறை அமைச்சர் லோரான் நுன்யெஸ், மாகாண ஆளுநர்களுக்கு கடுமையான அதிகாரத்தை பின்பற்ற உத்தரவுகளை வழங்கியுள்ளதாக France Inter வானொலியில் தெரிவித்துள்ளார். புத்தாண்டைக் கொண்டாட மக்கள் அதிக அளவில் வெளியே கூடுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், ஆண்டின் இறுதியில் வழக்கமாக ஏற்படும் நகர்ப்புற வன்முறைகளைத் தடுப்பதற்காகவும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் இதே அளவிலான காவல் படை பயன்படுத்தப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது. 

உள்துறை அமைச்சகம், மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணம் என எச்சரித்துள்ளது; குறிப்பாக, ஜனவரி 1 அன்று நிகழும் உயிரிழப்பு விபத்துகளில் பெரும்பாலானவை மதுபானம் காரணமாகவே ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்