நமக்கு வெற்றி ஒளிவீசும்; நம்பிக்கை தரும்: முதல்வர் ஸ்டாலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
31 மார்கழி 2025 புதன் 13:24 | பார்வைகள் : 168
ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026 என முதல்வர் ஸ்டாலின் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
புத்தாண்டுத் தொடக்கம் முதலே சமத்துவம் பொங்கட்டும். தமிழகம் வெல்லட்டும் எனக் கோலமிட்டு திராவிடப்பொங்கல் களைகட்டட்டும். கட்சியினர் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்த ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan