அடிக்கடி மலச்சிக்கலா? அலட்சியப்படுத்த வேண்டாம்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 13641
நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
- அது ஒரு நீண்ட பயணம்!
வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது.
சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும். அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு ‘மலம் வந்திருக்கிறது‘ என்ற தகவலை உணர்த்தும்.
அப்போதுதான் மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். மலத்தை வெளியேற்றுவ தில் மலக்குடல், ஆசனவாய் போன்றவைகளின் பங்கு முக்கியமானது. இவை இரண்டும் 15 செ.மீ. நீளம் கொண்டவை.
நேரத்திற்கு சாப்பிட்டால், அளவோடு சாப்பிட்டால், பழம், காய்கறிகளைகொண்ட சமச்சீரான பாரம்பரிய சத்துணவுகளை சாப்பிட்டால், வாழ்வியல் முறைகளை நன்றாக அமைத்துக்கொண்டால் மேலே சொன்ன அந்த நீ..ண்..ட.. உணவுப் பயணம் சரியாக நிகழும்.
முறையாக, முழுமையாக ஜீரண மாகி மலமும் நன்றாக வெளியேறும். இவை சரியாக நடக்கும் வரை நமக்கு எந்த சிக்கலும் இல்லை. வயிற்றில் எந்த விதமான அசவுகரியமும் ஏற்படாமல் நாம் உண்டு, நம் வேலை உண்டு என்று வாழ்க்கை பயணம் இனிதே தொடர்ந்து கொண்டிருக்கும்.
பொதுவாக மலச்சிக்கல் என்று நாம் எப்போது குறிப்பிடுகிறோம்?
பெரும்பாலும் பலரும் ஒரு நாள் ஒரு தடவை, அதுவும் காலை நேரத்தில் காலைக்கடன் கழிக்கிறார்கள். சிலர் இரு நாட்களுக்கு ஒருமுறை கழிப்பதும் உண்டு.
நாளுக்கு ஒரு முறையோ, இருநாளுக்கு ஒரு முறையோ அது இயல்பாக நெருக்கடி இன்றி வெளியேறாமல் முக்க வைப்பதும், ரொம்ப இறுக்கமாகி வெளியேற அவஸ்தை படுத்துவதும் மலச்சிக்கலாகும். அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதும், ஒரே நேரத்தில் வெளியேறாமல் மீண்டும் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும் மலச்சிக்கல்தான்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1