சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
28 கார்த்திகை 2025 வெள்ளி 13:54 | பார்வைகள் : 148
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எப்போது ரிலீஸ் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு சாப் அபயங்கர் இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ். ஸ்வாசிகா, அனகா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் வரும் ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனமும், தொலைக்காட்சி உரிமையினை ஜீ நிறுவனமும் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan