Paristamil Navigation Paristamil advert login

தனுஷ் பட தயாரிப்பாளர் மாறுகிறாரா ?

தனுஷ் பட  தயாரிப்பாளர் மாறுகிறாரா ?

28 கார்த்திகை 2025 வெள்ளி 13:54 | பார்வைகள் : 147


'அமரன்' படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி, தனுஷின் 55வது படத்தை இயக்கப் போவதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். படத்திற்கான பூஜையும் நடைபெற்றது. ஆனால், அதன்பின் படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

தனுஷ் அவரது 'இட்லி கடை' படத்தை முடிப்பதிலும், ஹிந்திப் படமான 'தேரே இஷ்க் மெய்ன்' படத்திலும் பிஸியாக இருந்தார். அவற்றை முடித்த பிறகு தனுஷ் 55 படத்தை ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், படத்தின் தயாரிப்பாளரான அன்புச் செழியனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட பட்ஜெட்டில் படத்தை முடிக்க தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் நடிக்க மம்முட்டி வேண்டும், சில பல வசதிகள் வேண்டும் என இயக்குனர் உறுதியாக இருந்துள்ளார். அதனால், படப்பிடிப்பு ஆரம்பமாவது தள்ளிப் போய்க் கொண்டே வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தைத் தானே தயாரிக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம். அதற்காக தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். எல்லாம் நல்லபடியாக முடிந்தால் மீண்டும் ஒரு அறிவிப்பு வரலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்