இலங்கையில் அவசர நிலைமை பிரகடனம் - மக்களை வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தல்
28 கார்த்திகை 2025 வெள்ளி 08:50 | பார்வைகள் : 141
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் காரணமாக இதுவரை 51 பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். 20இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
மலையகப் பகுதிகளில் அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளனதுடன் பலர் உயிரிழந்துள்ளனர்.
மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அநாவசியமாக மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறிற்கும் மேற்பட்ட, வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவின் விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அண்மித்த பகுதியில் காணப்படும் அழுத்தம் காரணமாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை விமான நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், முன்கூட்டியே விமான பயணம் தொடர்பில் அறிந்து செயற்பாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்து வரும் நாட்களுக்கு நிலைமை தீவிரம் அடையும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan