குளிர்காலத்தில் பாலியல் ஆசை அதிகரிக்க காரணம் என்ன?
27 கார்த்திகை 2025 வியாழன் 15:10 | பார்வைகள் : 133
குளிர்காலம் உங்கள் உடல் மற்றும் மனநிலையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி, லிபிடோவை இயற்கையாகவே அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்பம், ஹார்மோன்கள் மற்றும் சூரிய ஒளி போன்ற காரணிகள், பாலியல் ஆசை மற்றும் உறவில் நெருக்கத்தைக் கூட்டுகின்றன.குளிர்காலம் வெறும் பருவ மாற்றத்தை மட்டுமல்ல, நம் உடல் ஹார்மோன்களிலும், மனநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். பலருக்கும் இந்த பருவத்தில் உணர்ச்சி ரீதியான மற்றும் உடல் நெருக்கம் அதிகரிக்கத் தூண்டும், தனிப்பட்ட ஈர்ப்பு அதிகரிக்கும். இதற்கான அறிவியல் விளக்கத்தை பெங்களூரு ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் சிறுநீரக மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷஷாங்க் எம்.எஸ். பகிர்ந்துள்ளார்.
லிபிடோ என்றால் என்ன?லிபிடோ என்பது ஒருவரின் இயற்கையான பாலியல் ஆசை ஆகும். ஹார்மோன்கள், நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள், மனநிலை, மனஅழுத்தம், உடல் நலம், உறவின் உணர்ச்சி பிணைப்பு உள்ளிட்ட பல காரணிகள் இதைத் தீர்மானிக்கின்றன. ஒவ்வொருவரின் லிபிடோவும் தனித்துவமானது. அதுமட்டுமின்றி, வாழ்க்கையின் பல கட்டங்களில் அது இயற்கையாகவே மாறக்கூடும்.போதுமான தூக்கம், குறைந்த மனஅழுத்தம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன் சமநிலை போன்றவை லிபிடோவை நிலைப்படுத்த உதவும். அதேசமயம், நோய்கள், பதட்டம், சோர்வு அல்லது உறவில் உருவாகும் சிக்கல்கள் லிபிடோ குறைவதற்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன. குளிர்காலத்தில் லிபிடோ அதிகரிக்கக் காரணங்கள்
குளிர்காலத்தில் உடலில் சில ஹார்மோன்களும் ‘மனநிலையை மேம்படுத்தும்’ இரசாயனங்களும் இயற்கையாகவே அதிகரிக்கின்றன. இவை அரவணைப்பு, ஆறுதல் மற்றும் நெருக்கத்திற்கான உணர்வுகளை தூண்டுவதால், பாலியல் ஆசை உயர்வதற்கும் வழிவகுக்கும். மேலும், குளிர் காலம் போன்ற பருவங்களில் அதிக நேரம் வீட்டிற்குள் ஒன்றாகக் கழிப்பதும், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான நெருக்கத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
ஹார்மோன் மாற்றங்கள்குளிர்காலத்தில் உடலில் சில ஹார்மோன்களும் ‘மனநிலையை மேம்படுத்தும்’ இரசாயனங்களும் இயற்கையாகவே அதிகரிக்கின்றன. இவை அரவணைப்பு, ஆறுதல் மற்றும் நெருக்கத்திற்கான உணர்வுகளை தூண்டுவதால், பாலியல் ஆசை உயர்வதற்கும் வழிவகுக்கும். மேலும், குளிர் காலம் போன்ற பருவங்களில் அதிக நேரம் வீட்டிற்குள் ஒன்றாகக் கழிப்பதும், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான நெருக்கத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
உளவியல் காரணங்கள்குளிர் காலத்தில், ‘சூடான, பாதுகாப்பான சூழலில் இருக்க வேண்டும்’ என்று இயற்கையாகவே ஆசை உருவாகிறது. உடல் சூடாக இருக்க வேண்டும் என்ற தேவையுடன் வரும் ஆறுதல், பாதுகாப்பு மற்றும் நெருக்கம் போன்ற உணர்வுகள் மனதை தளர்த்துகின்றன. இந்த உளவியல் ரீதியிலான அமைதி மற்றும் உணர்ச்சி பிணைப்பு அதிகரிக்கும் போது, லிபிடோவும் இயற்கையாகவே உயர்வதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
சுற்றுச்சூழல் காரணங்கள்குளிர்காலத்தில் சூரிய ஒளி பிரகாசமாக கிடைப்பதால், செரோடோனின் மற்றும் வைட்டமின் டி போன்ற மனநிலையை மேம்படுத்தும் கூறுகள் உடலில் அதிகரிக்கின்றன. இதனால், ஆற்றல் மட்டம் உயர்ந்து, மனம் சுறுசுறுப்பாகி, இயற்கையாகவே லிபிடோவும் தூண்டப்படுகிறது.ஆனால், சிலருக்கு குறைந்த சூரிய ஒளி, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களையும் உண்டாக்கும். இதனால் லிபிடோ குறையக்கூடும்.
குளிர் வெப்பநிலை தானாகவே ஊக்குவிக்கிறதுகுளிர் காலத்தில் உடல் இயற்கையாகவே வெப்பமடைய முயலும் போது, உடல் நெருக்கம் மிகவும் ஆறுதலான ஒன்றாக மாறுகிறது. அதே நேரத்தில், குளிர்காலத்தில் மக்கள் பெரும்பாலும் வீட்டில் நீண்ட நேரம் சேர்ந்து இருப்பதால், நெருக்கமும் பிணைப்பும் அதிகரிக்கிறது சில ஆய்வுகள், குளிர்ந்த காலநிலை தான் உடல் சோர்வை குறைத்து, ஆற்றலை அதிகரிக்கும் என்று குறிப்பிடுகின்றன. இது மறைமுகமாக பாலியல் ஆசையை அதிகரிக்க உதவும்.
சூரிய ஒளி வைட்டமின் டி, செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இவை மகிழ்ச்சியையும், தளர்வையும் அளிக்கின்றன. குளிர்கால சூரிய ஒளி பல வகையில் உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. சூரிய ஒளி தூக்கச் சுழற்சியை ஒழுங்குப்படுத்தி, அதிக ஆற்றலை வழங்குகிறது. இது இயற்கையாகவே ஆர்வத்தையும், லிபிடோவையும் உயர்த்துகிறது. மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மை, உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் விளைவு, துணையுடன் நேர்மறையான மனநிலையை உருவாக்குவது போன்ற பல காரணங்கள் சேர்ந்து, குளிர்கால சூரிய ஒளியை, பாலியல் ஆசையை அதிகரிக்கும் முக்கிய காரணியாக மாற்றுகின்றன.
லிபிடோ அதிகரித்தால், பெரும்பாலும் உறவில் நல்ல பலன்களே கிடைக்கும். துணை உணர்ச்சி ரீதியாக நெருக்கமாவார்கள், பேசுவதும், புரிந்துகொள்வதும் மேம்படும், பிணைப்பும் வலுவாகும்.ஆனால், இருவரின் லிபிடோ அளவு ஒன்றாக இல்லாவிட்டால் சிக்கல்கள் தோன்றலாம். ஒருவருக்கு அதிக ஆர்வமும், இன்னொருவருக்கு குறைவாகவும் இருக்குமானால், அது மனஅழுத்தம், குழப்பம், புரிதல் குறைவு போன்றவற்றை ஏற்படுத்தி, சரியான உரையாடல் இல்லையெனில் உணர்ச்சிப்பூர்வமான தூரத்தையும் உருவாக்கலாம்.
உறவுகளை வலுப்படுத்த வெளிப்படையான உரையாடல் என்பது முக்கியமானதாகும். தங்களுடைய விருப்பங்கள் மற்றும் தேவைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்பிக்கையை உருவாக்கி, நெருக்கமான நேரங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவிப்பதும், சிரிப்பதும், மனஅழுத்தத்தை குறைப்பதும் இருவருக்கு இடையேயான உறவை மேலும் மேம்படுத்தும். போதுமான அளவு தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவை முக்கியமாகும். சில நேரங்களில், தொலைபேசிகளை தூரமாக வைத்துவிட்டு, முழு கவனத்தையும் தங்களது துணை மீது செலுத்துவது கூட உறவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
இவ்வாறாக, குளிர் காலம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நெருக்கத்தை அதிகரிக்க உதவுகின்றன. இதனால் பெரும்பாலான மக்களிடம் லிபிடோ இயற்கையாகவே உயர்கிறது.உங்களின் உணர்ச்சிகளையும், தேவைகளையும் துணையுடன் சரியாகப் பகிர்ந்தால், குளிர்காலம் உங்கள் உறவை இன்னும் நெருக்கமாக வைத்திருக்கும் வாய்ப்பை வழங்கும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan