Paristamil Navigation Paristamil advert login

உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகம் - பல்வேறு இடங்களில் அஞ்சலி

உணர்வெழுச்சியுடன் தமிழர் தாயகம் - பல்வேறு இடங்களில் அஞ்சலி

27 கார்த்திகை 2025 வியாழன் 12:30 | பார்வைகள் : 141


மாவீரர் நாள் தாயகமெங்கும்  அனுஷ்டிக்கப்படும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் சங்கருக்கு கம்பர்மலையால் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து குட்டியானி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியிலும், மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்திலும் சுடர் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை அடுத்து, தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி பொன் சிவகுமாரனின் உரும்பிராயில் உள்ள நினைவு தூபிக்கும் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில்  இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவீரர் மில்லரின் நினைவாக நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக ஈகை சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில்  இராணுவத்தின் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதால் இராணுவ முகாம் முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

வல்வெட்டித்துறை கடற்கரையில் கடலில் காவியமான கடற்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்