Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் Wobble One நிறுவனம் வெளியிட்ட முதல் Android ஸ்மார்ட்போன்

இந்தியாவின் Wobble One நிறுவனம் வெளியிட்ட முதல் Android ஸ்மார்ட்போன்

27 கார்த்திகை 2025 வியாழன் 11:30 | பார்வைகள் : 129


இந்தியாவின் Wobble One நிறுவனம் தனது முதல் Android ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் டிவி வரிசைக்கு பெயர் பெற்ற பெங்களூருவை தளமாகக் கொண்ட பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Wobble, தனது முதல் Android ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Wobble One எனப்படும் இந்த மொடல், Rs.22,000 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன், MediaTek Dimensity 7400 சிப் செட் மூலம் இயக்கப்படுகிறது.

இதிலுள்ள 6.67 inch AMOLED திரை, 120Hz refresh rate, Dolby Vision ஆதரவு மற்றும் Full HD+ resolution-உடன் வருகிறது.

அலுமினியம் அலாய் பிரேம் மற்றும் கண்ணாடி பின்புற வடிவமைப்புடன், இது Android 15 இயங்குதளத்தில், எந்தவித bloatware இல்லாமல், stock Android அனுபவத்தை வழங்குகிறது.

பின்புறத்தில், சதுர வடிவ camera அமைப்பில், 50MP Sony Lytia 600 பிரைமரி சென்சார், 8MP ultra-wide camera, 2MP macro லென்ஸ் ஆகிய மூன்று லென்ஸ்கள் உள்ளன.

பேட்டரி திறன் குறித்து நிறுவனம் விவரம் தெரிவிக்கவில்லை. ஆனால், போட்டியாளர்களை விட 25 சதவீதம் அதிக நேரம் நீடிக்கும் எனக் கூறியுள்ளது.

RAM மற்றும் Storage: அதிகபட்சம் 12GB RAM மற்றும் 256GB சேமிப்பு வசதி கொண்டுள்ளது.

நிறங்கள்: Mystic White, Eclipse Black, Odyssey Blue.

விற்பனை: ஓன்லைன் தளங்கள் மற்றும் ரீட்டெயில் சேனல்கள் மூலம் கிடைக்கும்.

அறிமுக நிகழ்வில், Wobble நிறுவனம் தனது மற்ற தயாரிப்புகளையும் வெளியிட்டது.

அதில் AMD மற்றும் Intel லேப்டாப்கள், குறைந்த விலை Android டேப்லெட்கள், பெரிய Smart TV-கள், உருவாக்கத்தில் உள்ள Smart Glasses மற்றும் Apple Vision Pro போன்ற Mixed Reality ஹெட்செட் ஆகியவை அடங்கும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்