மனைவியை நேசிக்கும் ஆண்கள் கூட கள்ளக்காதலில் ஈடுபடுவதகான காரணங்கள் என்ன தெரியுமா?
26 கார்த்திகை 2025 புதன் 17:36 | பார்வைகள் : 117
இன்றைய காலகட்டத்தில் திருமணம் மீறிய உறவுகள் என்பது ஆயிரக்கணக்கான தம்பதிகளின் திருமண வாழ்க்கையை மோசமாகப் பாதித்து வருகிறது. துரோகம் அல்லது துணையை ஏமாற்றுவது என்பது ஒரு உறவில் நீங்கள் செய்யக்கூடிய மிகவும் தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் ஒன்றாகும். தம்பதிகள் இந்த உறவு சிக்கல்களிலிருந்து மீள முடியும், ஆனால் பலர் அப்படிச் செய்வதில்லை. ஒருவேளை அவர்கள் ஒன்றாக இருக்க முடிவு செய்தாலும், ஏற்பட்ட சிக்கலை சரிசெய்ய நிறைய முயற்சிக்க வேண்டியிருக்கும்.
ஒவ்வொருவருக்கும் தங்கள் துணைக்கு துரோகம் செய்வதற்கு பல்வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவெனில் சில சமயங்களில் நேர்மையான ஆண்கள் கூட தங்கள் துணைக்கு சூழ்நிலைகளைகளாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தங்கள் துணைக்கு துரோகம் செய்ய முனைகின்றனர். இந்த பதிவில் தங்கள் மனைவியை நேசிக்கும் நேர்மையான ஆண்கள் கூட திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பாலியல் ஆசைகள்
பாலியல் ஆசைகள் ஆண்கள் எவ்வளவுதான் தங்கள் துணையை நேசித்தாலும் பாலியல் ஆசைகள் என்று வரும் போது அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். சிலர் தங்கள் துணையிடம் பாலியல் திருப்தியை உணராததால் அல்லது மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கை கிடைக்காததால் தங்கள் மனைவிக்கு துரோகம் செய்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான அனுபவங்களை எதிர்பார்க்கலாம் அல்லது தங்கள் உறவில் பாலியல்ரீதியாக திருப்தி அடையவில்லை என்று உணரலாம். இதுபோன்ற சூழலில் அவர்கள் வேறொருவர் மீது பாலியல்ரீதியாக ஈர்க்கப்பட்டு தங்கள் துணைக்கு துரோகம் செய்ய தயாராகிறார்கள்.
கோபம்
நேர்மையானவர்களின் முதல் எதிரி கோபம்தான். எனவே நேர்மையான ஆண்களுக்கு கோபம் அதிகமாக வரும். சில ஆண்கள் தங்கள் துணை மீது ஏற்படும் கோபத்தினாலோ அல்லது அவர்களை பழிவாங்குவதற்காகவோ ஏமாற்றுகிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்கள் துணையின் மீது கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ உணர்கிறார்கள், மேலும் அவர்களுக்கு துரோகம் செய்வதை அவர்களுக்கு வழங்கும் தண்டனையாகக் கருதுகிறார்கள். தங்கள் துணை தங்களை காயப்படுத்தியதற்கு பழிவாங்குவதற்கான ஒரு வழி ஏமாற்றுதல் என்று அவர்கள் உணரலாம். ஆனால் இந்த கோபமும் அதனால் நிகழும் துரோகங்களும் தாற்காலிகமானதுதான்.
மனைவி போதுமான அன்பு செலுத்தாமல் இருப்பது
சில ஆண்கள் தங்கள் மனைவி தங்களைப் போல தீவிரமாக காதலிக்கவில்லை என்று எளிய காரணத்திற்காக கூட அவர்களின் மனைவி துரோகம் செய்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் காதலிக்கத் தொடங்குவதே அவர்களின் துணை மீதிருக்கும் ஆரம்பகட்ட ஈர்ப்பால்தான். சிலர் காலப்போக்கில் தங்கள் துணையின் மீதான அந்த ஈர்ப்பையோ அல்லது அன்பையோ இழக்கிறார்கள். பெண்கள் தங்கள் துணையை காதலிக்காதபோது, அது ஏமாற்றுவதற்கு ஆரம்பப்புள்ளியாக இருக்கும். சிலர் இனி மகிழ்ச்சியைத் தராத உறவை விட்டு வெளியேறுவதற்கான ஒரு வழியாக திருமணம் மீறிய உறவைப் பயன்படுத்தலாம்.
மனைவியின் புறக்கணிப்பு
ஒரு உறவில் புறக்கணிக்கப்பட்டதாக உணருவது, மனைவிக்கு துரோகம் செய்வதற்கான முக்கிய காரணமாக ஆண்களுக்கு இருக்கிறது. உதாரணமாக, உங்கள் துணை வேலையில் அதிக நேரம் செலவிடுவதால், உங்கள் உறவில் கவனம் செலுத்த நேரமில்லாமல் இருக்கலாம். ஒருவேளை அவர்கள் வேலை நிமித்தமாக தொலைவில் வசிக்கலாம், இதனால் நீங்கள் அவர்களை நீண்ட காலமாகப் பார்க்க முடியாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்களும் உங்கள் துணையும் இணைந்திருக்கவில்லை, உங்கள் உறவில் நீங்கள் தனியாக உணர்ந்தால் உங்கள் மனம் வேறொருவரை நோக்கி நகரலாம்.
சூழ்நிலை அல்லது வாய்ப்புகள்
இது மிகவும் மோசமான ஒரு காரணமாகும். தங்கள் மனைவிக்கு துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் தானாக தேடிவரும் போது அதை வெகுசில ஆண்களே புறக்கணிக்கிறார்கள். குறிப்பாக மது போதையில் இருக்கும் போது ஆண்கள் நிலை தடுமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்த பொதுவான காரணங்கள் மட்டுமின்றி, ஆண்கள் துரோகம் செய்வதற்கு அவர்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளும் காரணமாக இருக்கலாம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan