ChatGPT-யில் புதிய Shopping ஆய்வு கருவியை அறிமுகம் செய்த OpenAI
26 கார்த்திகை 2025 புதன் 15:36 | பார்வைகள் : 112
செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, ChatGPT பயனர்களுக்காக புதிய Shopping Research Tool-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கருவி, விடுமுறை காலத்தில் மக்களுக்கு (buyers) தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டியை (personalised buyer’s guide) உருவாக்க உதவும்.
இது குறித்து OpenAI தெரிவித்ததாவது,
ChatGPT ஏற்கனவே வாங்குதல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தாலும், புதிய கருவி GPT-5 mini மாடலில் பயிற்சியளிக்கப்பட்டு, பயனர்களிடம் clarifying questions கேட்டு, உயர்தரமான இணைய விமர்சனங்கள் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும்.
பயனர்கள், “ஸ்டூடியோ அபார்ட்மெண்டுக்கு சிறிய சோஃபா தேவை” அல்லது “கலையை விரும்பும் 4 வயது மருமகளுக்கு பரிசு தேவை” போன்ற கேள்விகளை கேட்கலாம்.
இந்த கருவி, முதலில் quiz format-ல் கூடுதல் தகவல்களை கேட்டு, பின்னர் 10-15 பொருட்களை பரிந்துரைக்கும். பயனர்கள் “more like this” அல்லது “not interested” என்பதைத் தேர்வு செய்து பட்டியலை சரிசெய்யலாம்.
இந்த கருவி electronics, beauty, home, kitchen, appliances, outdoor items போன்ற detail-heavy categories-இல் சிறப்பாக செயல்படும்.
ஆனால், சாதாரண விலை அல்லது hardware specifications போன்ற எளிய கேள்விகளுக்கு, வழக்கமான ChatGPT search-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த கருவி, affiliate links மூலம் கமிஷன் பெறும் online buyer guides-க்கு மாறாக, சுயாதீன விமர்சனங்களை ஒருங்கிணைத்து, சில்லறை விற்பனையாளர்களுக்கு தகவல்களை பகிராமல் செயல்படும்.
ஜனவரி வரை இலவசமாக வரம்பற்ற பயன்பாட்டை வழங்குவதாகவும், Stripe checkout வசதி தனியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் 35 பில்லியன் யூரோ இராணுவ விண்வெளி திட்டம் - எழுந்துள்ள சர்வதேச விவாதம்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan