Paristamil Navigation Paristamil advert login

சூர்யாவின் 46வது படம் எப்போது வெளியாகும் ?

சூர்யாவின் 46வது படம்  எப்போது வெளியாகும் ?

26 கார்த்திகை 2025 புதன் 15:32 | பார்வைகள் : 101


ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ள கருப்பு படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கிய தனது 46வது படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் சூர்யா 46வது படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு மற்றும் ராதிகா சரத்குமார்,

ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். குடும்ப கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கஜினி படத்தில் நடித்த சஞ்சய் ராமசாமி கெட்டப்பில் நடித்திருக்கிறார் சூர்யா. இதையடுத்து டிசம்பர் 8ம் தேதி முதல் ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47 வது படத்தில் நடிக்க போகிறார். மேலும் சூர்யா 46வது படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் கருப்பு படம் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 23-ல் வெளியாவதற்கு வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்