ஒரே மாதத்தில் 3 உலகக்கோப்பை - ஆதிக்கம் செலுத்தும் இந்திய மகளிர் அணி
25 கார்த்திகை 2025 செவ்வாய் 11:51 | பார்வைகள் : 430
மகளிர் கபடி உலகக்கோப்பையை வென்றதன் மூலம், இந்திய மகளிர் அணி ஒரே மாதத்தில் 3 உலகக்கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.
11 அணிகள் பங்குபெற்ற உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
இதில், லீக் போட்டிகளில் தாய்லாந்து, வங்கதேசம், ஜேர்மனி மற்றும் உகாண்டா அணிகளையும் அரையிறுதியில் ஈரானையும் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
25-11-2025 நடைபெற்ற இறுதிப்போட்டியில், சீன தைபே அணியை 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் அணி வென்று தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற இந்திய மகளிர் கபடி அணிக்கு, இந்திய பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து உலக அரங்கில் விளையாட்டு துறையில் இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
நவம்பர் 2 ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற 2025 மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையை வென்றது.
நவம்பர் 23 ஆம் திகதி, கொழும்புவில் நடைபெற்ற பார்வையற்ற பெண்களுக்கான T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
இந்திய மகளிர் கபடி அணி உலகக்கோப்பையை வென்றதன் மூலம், ஒரே மாதத்தில் இந்திய மகளிர் அணி 3 உலககோப்பைகளை வென்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan