Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கனடாவில் ஆபத்தான பக்டீரியா தொற்று - எச்சரிக்கும் ஆராச்சியாளர்கள்

கனடாவில் ஆபத்தான பக்டீரியா தொற்று - எச்சரிக்கும் ஆராச்சியாளர்கள்

29 மார்கழி 2025 திங்கள் 19:01 | பார்வைகள் : 192


கனடாவில் ஆபத்தான பக்டீரியா தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கால்கரி நகரில் வாழும் வீடில்லா மற்றும் நிலையற்ற குடியிருப்பில் உள்ள பெரியவர்கள் மத்தியில், எச்.ஐ.பி Haemophilus influenzae type b (Hib) எனப்படும் அரிய பாக்டீரியா பரவி வருவதாக கனடாவின் அல்பேர்டா மாகாண சுகாதார அதிகாரிகள், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“மரபணு ரீதியாக வேறுபட்ட ஒரு Hib வகை காரணமாக, ஆழமான (invasive) Hib தொற்றுகளின் ஒரு குழுமம் கண்டறியப்பட்டுள்ளது” என சுகாதார பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்த Hib வகை இதற்கு முன் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பதிவாகியுள்ளது. தற்போது அது, வீடில்லாதவர்கள் அல்லது நிலையற்ற வீடுகளில் வாழும் பெரியவர்கள் மத்தியில் எங்கள் பிராந்தியத்திலும் காணப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு, வான்கூவர் தீவில் Hib பரவல் ஒன்று பதிவாகி, வீடில்லா மக்களும் போதைப்பொருள் பயன்படுத்துவோரும் அதனால் பாதிக்கப்பட்டனர்.

அப்போது ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அல்பேர்டா அரசின் தகவலின்படி, • 2025ஆம் ஆண்டில் கால்கரி பிராந்தியத்தில் 8 Hib சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, 2024ஆம் ஆண்டில் 3 சம்பவங்கள் மற்றும் • 2019 முதல் 2023 வரை 2 சம்பவங்கள் இருந்த நிலையில், குறிப்பிடத்தக்க உயர்வாகும்.

“Hib ஒரு காலத்தில் குழந்தைகளில் அதிகமாக காணப்பட்ட தொற்று. ஆனால் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு, குழந்தைகளுக்கான வழக்கமான தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்ட பிறகு, அதன் தாக்கம் பெரிதும் குறைந்தது” என டொரண்டோ ஜெனரல் மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணரான டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.

“Hib மிகவும் பொதுவான தொற்று அல்ல. இருப்பினும், மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் அவ்வப்போது இதைப் பார்ப்பது ஆச்சரியமல்ல. இது ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள சுகாதார அமைப்புக்கு பெரிய சுமையை ஏற்படுத்தாது. ஆனால் வீடில்லா நிலை போன்ற ஆபத்து காரணிகளுடன் வரும் நோயாளிகளில் இந்த தொற்றை கருத்தில் கொள்ளுதல் அவசியம்” என அவர் கூறியுள்ளார்.

இந்த Hib தொற்று கால்கரியில் இன்னும் அரிதானதே என்றாலும், “இந்த பாக்டீரியா வகையின் தனித்துவமான பரவல் தன்மை (epidemiology) காரணமாக விழிப்புணர்வு தேவை” என நினைவுக் குறிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Hib தொற்றின் அறிகுறிகள் பெயரில் ஒற்றுமை இருந்தாலும், Hib என்பது இன்ஃப்ளூயன்சா வைரஸுடன் தொடர்பற்றது; இது ஒரு பாக்டீரியா ஆகும். ஆரம்ப நிலையில், காய்ச்சல் போன்ற அறிகுறிகள், காது அல்லது சைனஸ் தொற்றுகள் போன்றவை ஏற்படலாம்.

அரிதான, ஆனால் தீவிரமான நிலைகளில், இந்த பாக்டீரியா இரத்தத்தில் பரவி பல உறுப்புகளைத் தாக்கி, அதிக காய்ச்சல், மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளை உருவாக்கி, உயிரிழப்புக்கும் காரணமாகலாம் என கனடிய சுகாதார நிறுவனம் எசச்ரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்