Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

குழந்தையை மன வலிமை கொண்டவராக வளர்ப்பது எப்படி.?

குழந்தையை மன வலிமை கொண்டவராக வளர்ப்பது எப்படி.?

29 மார்கழி 2025 திங்கள் 16:27 | பார்வைகள் : 155


தங்கள் குழந்தைகள் மீது பெற்றோர்கள் வைக்கும் அளவுகடந்த அன்பு, குழந்தைகளுக்கு ஏற்படும் சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்து பிரச்சனைகளை தீர்க்கவும், குழந்தைகளின் வாழ்க்கையை எளிதாக்கவும் பெற்றோர்களை தூண்டுகிறது.பெரும்பாலான பெற்றோர்களிடம் காணப்படும் இந்த பழக்கம் உண்மையில் மன வலிமைமிக்க குழந்தையை வளர்க்க நினைத்தால் உதவாது. ஏனென்றால் ஒரு குழந்தை தனது சொந்தப் பிரச்சனைகளைத் தானே தீர்த்து கொண்டு, அவற்றிலிருந்து அனுபவங்களை கற்று கொள்வது முக்கியம்.

, “நீங்கள் மனதளவில் வலிமையான குழந்தைகளை வளர்க்க விரும்பினால், அவர்கள் தங்களின் சொந்தப் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்து கொள்ள அனுமதிக்க வேண்டும். மாறாக அவர்களின் பிரச்சனைகளை நீங்கள் தலையிட்டு அதிகமாக தீர்த்து வைக்கிறீர்கள் என்றால், அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் திறமையற்றவர்களாக வளர்வார்கள். எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளை மனதளவில் வலிமையான நபராக வளர்க்க விரும்பினால், அவர்களுக்காக நீங்கள் அதிகமாக எதையும் செய்ய கூடாது.


அவர்கள் நம் அப்பா, நம் அம்மா என்ற எண்ணத்தில் உங்களிடம் ஒரு பிரச்சனையைக் கொண்டு வரும்போது, ​​உடனே நீங்கள் எதுவும் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் முதலில் இபப்டி கூறுங்கள்..'ஆஹா, நீ மிகவும் புத்திசாலி. இந்த பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறாய்?' என்று வினவி அவர்கள் அதைப் பற்றிச் சிந்திக்க செய்யுங்கள், அவர்கள் அதற்கான பதிலை கூறும் வரை உங்கள் கருத்தைத் தெரிவிக்காதீர்கள்” என்று டிப்ஸ் கொடுத்துள்ளார்.

“நீங்கள் மனதளவில் வலிமையான குழந்தைகளை வளர்க்க விரும்பினால், பெற்றோருக்குரிய கடமைகளில் இதுவே உங்கள் முன்னுரிமைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.மன வலிமையான குழந்தைகளை வளர்ப்பது குறித்த மேற்கண்ட இவரது கருத்து, சமீப ஆண்டுகளாக பெற்றோர்களால் குழந்தைகளுக்கு எல்லாம் எளிதாக கிடைப்பதை எதிரொலிக்கிறது. பல பெற்றோர்கள் மத்தியில் காணப்படும் இந்த பழக்கம் எளிதில் அவர்களின் பிள்ளைகளை உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்களாக மாற்றக்கூடும்; இப்படி வளரும் குழந்தைகள் தங்கள் சொந்தப் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்து கொள்ளத் தெரியாத அல்லது இயலாத நபர்களாகவே இருப்பார்கள்.

அதற்காக எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் உதவவே கூடாதா என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழலாம். உங்கள் குழந்தைக்கு உதவுவது ஒரு பிரச்சனையல்ல, ஆனால் அவர்களைச் சிந்திக்க விடாமல் செய்வதோ அல்லது அவர்களது சொந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கப் போதுமான நேரம் கொடுக்காமல் நீங்களே அதை உங்கள் கையில் எடுப்பதோ தான் எதிர்காலத்தில் பிரச்சனையாகலாம். உங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் கொடுங்கள், ஆனால் அதற்கு முன்பு, அந்தப் பிரச்சனையைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும், அதைத் தாங்களாகவே சரிசெய்ய முயற்சித்தீர்களா என்றும் அவர்களிடம் கேளுங்கள் என்று தான் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

தங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து சிந்திக்க குழந்தைகள் கற்றுக்கொண்டால், அவர்களின் சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் மேம்படும். இது பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க தவறும் ஒரு முக்கிய வாழ்க்கைத்திறன் ஆகும். எனவே உங்கள் குழந்தை சிறிய வயதில் இருக்கும் போதே அவர்களுக்கு இந்த திறன் வளர செய்யுங்கள், இதன் மூலம் அவர்கள் வளரும் போது மனவலிமைமிக்க நபர்களாக மாறுவார்கள்.

மனநல மருத்துவரான டேனியல் ஜி. அமென், மன வலிமைமிக்க குழந்தைகளை வளர்ப்பதற்கான சில ஆலோசனைகளை வழங்கி தனது கருத்துக்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்