பரிஸ் லா மத்லேன் தேவாலயத்தில் சக்ரிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியவர் கைது: OQTF உத்தரவு!!
28 மார்கழி 2025 ஞாயிறு 16:43 | பார்வைகள் : 947
பரிஸின் 8-வது மாவட்டத்தில் உள்ள லா மத்லேன் தேவாலயத்தில், இந்த சனிக்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில், ஒரு பீட பணியாளர் (un sacristain) மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தேவாலயத்திற்குள் உணவு உண்ணுவதை நிறுத்துமாறு அல்லது வெளியேறுமாறு கேட்டபோது, சந்தேகநபர் அவரை தாக்கி கழுத்தை நெரிக்க முயன்றுள்ளார்.
சந்தேகநபர் கால்நடையாக தப்பிச் சென்றிருந்தாலும், பாதிக்கப்பட்டவர் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சில நிமிடங்களில் அதே பகுதியில் சந்தேகநபரை கைது செய்தனர். பின்னர் அவர் உடல்நலக் காரணங்களால் விடுவிக்கப்பட்டார்.
லேசான காயங்களுடன் இருந்த பாதிக்கப்பட்டவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மதம் மற்றும் இன அடிப்படையிலான வன்முறை, மரண மிரட்டல் மற்றும் வழிபாட்டைத் தடுக்க முயற்சித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய உத்தரவு (OQTF) வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan