சீனாவில் ‘மெக்னடிக் லெவிடேஷன்' 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்
28 மார்கழி 2025 ஞாயிறு 17:19 | பார்வைகள் : 546
சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ‘மெக்னடிக் லெவிடேஷன்' எனப்படும் காந்தப்புல தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்தினர்.
இந்த ரயிலானது 2 விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்துள்ளது.
400 மீற்றர் நீளமுள்ள காந்தப்புல ரயில் பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
இதன் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட காந்தப்புல ரயில்களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெருமையை இது பெற்றது.
இந்த ரயில், தண்டவாளங்களைத் தொடாமல், அதன் மேலே காந்த விசையில் செல்லக்கூடியது. இதன் முடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது.
ஒரு ரொக்கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்தது. இந்த வேகத்தில் நீண்ட தொலைவில் உள்ள நகரங்களை சில நிமிடங்களில் இந்த ரயில்கள் மூலம் இணைக்க முடியும்.
இந்த சாதனையை படைத்த ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan