பரிஸ் ட்ரோகத்ரோவில் மீண்டும் சட்டவிரோதமாக பட்டாசு வெடிப்பு:40 பேர் கைது!!
28 மார்கழி 2025 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 722
பரிஸில் உள்ள ட்ரோகடேரோ எஸ்பிளனேடில் (l’esplanade du Trocadéro) , இந்த சனிக்கிழமை மாலை சட்டவிரோதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த சம்பவம் இரவு 8.50 மணியளவில் நடைபெற்றுள்ளது.
வீடியோ கண்காணிப்பு மூலம் புகைக் குண்டுகள் மற்றும் பட்டாசுகளை பயன்படுத்திய ஒரு குழுவை காவல் துறை கண்டறிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் 40 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; ஆனால் இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் பரிஸில் இப்படியான சம்பவம் நடைபெறுவது இது இரண்டாவது முறை. கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, ட்ரோகடேரோ அருகே ஒரு வீடியோ உருவாக்குநர் தனது ஆவணப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அனுமதியின்றி பட்டாசு வெடிப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த சம்பவமும் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது, அதற்கும் “பிறரின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல்” என்ற குற்றச்சாட்டில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போது யாரும் கைது செய்யப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan