அமெரிக்காவில் அதிதீவிர பனிப்புயல் - 1500 விமானப் பயணங்கள் இரத்து
28 மார்கழி 2025 ஞாயிறு 07:15 | பார்வைகள் : 303
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நிலவும் அதிதீவிர பனிப்புயல் மற்றும் கனமழை காரணமாக சுமார் 1500 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
26.12.2025 மாலை நிலவரப்படி சுமார் 1,500 விமானப் பயணங்கள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ‘டெவின்’ (Devin) குளிர்கால புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (26) அமெரிக்காவிலிருந்து மற்றும் அமெரிக்கா வழியாக இயக்கப்பட வேண்டிய 1,581 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 6,883 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன.
இதனிடையே, அமெரிக்காவில் ‘டெவின்’ குளிர்கால புயல் காரணமாக “ பயண நிலைமைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் தாமதம் மற்றும் ரத்து குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன கலிபோர்னியாவில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் புயல் அபாயம் நிலவுவதுடன், 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகும் அதிகபட்ச பனிப்பொழிவாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan