RER A ரயிலில் மோதி 12 வயது சிறுமி படுகாயம்!!
27 மார்கழி 2025 சனி 13:49 | பார்வைகள் : 886
டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை, Val-d’Oise மாவட்டத்தில் உள்ள செர்ஜி பிரெபெக்சூர் நிலையத்தில் RER A ரயில் நுழைந்தபோது, 12 வயது சிறுமி ரயிலால் மோதப்பட்டு கடுமையாக காயமடைந்துள்ளார்.
மீட்புப் படையினர், தேசிய காவல் துறையினர் மற்றும் ரயில் நிலைய காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, சிறுமிக்கு அந்த இடத்திலேயே மருத்துவ உதவி அளித்து பொந்துவாஸ் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றனர். ஒரு சாட்சியரும் அதிர்ச்சியடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் RER A வழித்தடத்தில் Cergy le Haut மற்றும் Achères-Ville கிளைகளிலும், டிரான்சிலியன் L வழித்தடத்திலும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மாலை 6 மணியளவில் சேவை மீண்டும் தொடங்கினாலும், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இது விபத்தா அல்லது வேறு காரணமா என்பதை உறுதிப்படுத்த காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆரம்ப தகவல்களின்படி, ரயில் நிலையத்திற்குள் நுழைந்த தருணத்தில், சிறுமியின் கால்கள் ரயில் தளத்திற்கு இடையில் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
டிசம்பர் 16 அன்று காலை 6 மணியளவில், Noisy–Champs நிலையத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தால், அந்த நாளின் முழு காலை நேரத்திலும் ரயில் சேவை இதேபோன்று கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan