Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கனடாவின் பயங்கர விபத்து - இருவர் பலி

கனடாவின் பயங்கர விபத்து - இருவர் பலி

27 மார்கழி 2025 சனி 07:06 | பார்வைகள் : 158


கனடாவின் மொன்றியாலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லனோடியேர் (Lanaudière) பிராந்தியத்தில், ஒரு ஏரியில் டிராக்டர் மூழ்கிய விபத்தையடுத்து, ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கியூபெக் மாகாண காவல்துறையினர், இருவரின் உடல்களும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஏரியைச் சுற்றியுள்ள பாதையில் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த இருவரும் டிராக்டரில் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவங்கள் அனைத்தையும் விசாரிக்கும் விசாரணைக்குழு, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதுடன், தீவிர நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் உயிரிழந்ததாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. வியாழக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்ட குறுகிய அறிக்கையில், சற்ரி காவல்துறை சேவை அந்தப் பெண் “துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சுயாதீன விசாரணை நடைமுறைகள் நடைபெற்று வரும் நிலையில், மேலதிக தகவல்களை வழங்க இயலாது” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் குறித்து எந்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை; அவர் ஒரு வயது வந்த பெண் என்பதையே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்ட சாட்சிகள் இருந்தால், 1-855-446-8477 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்