மெட்ரோ 3: கத்தி குத்தால் பெண்கள் காயம்!! சந்தேக நபர் கைது!!
26 மார்கழி 2025 வெள்ளி 20:17 | பார்வைகள் : 1096
பரிஸ் மெட்ரோ 3இல் வெள்ளிக்கிழமை 16:15 முதல் 16:45 வரை, கத்தியுடன் இருந்த ஒரு ஆண் மூன்று பெண்களை வெவ்வேறு நிலையங்களில் தாக்கியுள்ளார். ரீபப்லிக் (République), ஆர்ஸ் எ மெத்தியே (Arts et Métiers) மற்றும் ஒபேரா (Opéra) ஆகிய நிலையங்களில் நடந்த இந்த தாக்குதல்களில், பெண்கள் லேசான காயங்கள் அடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவ குழுக்களால் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவருக்கு முதுகிலும் தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் மெட்ரோ 8 இல் தப்பிச் சென்றுள்ளார். வீடியோ கண்காணிப்பு மற்றும் கைப்பேசி இருப்பிடத் தகவல்களின் உதவியுடன், 2000-ஆம் ஆண்டு பிறந்த அந்த நபர் பரிஸ் புறநகரான சார்செல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை தகவலின்படி, இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இல்லை என்றும், மனநல பாதித்த நபரின் செயலாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மெட்ரோ சேவை வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan